முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 389-யை நிறைவேற்றியுள்ளோம் : எடிப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
CM 2024-12-10

Source: provided

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. ரூ.51.37 கோடியில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.  ரூ.164 கோடியில் 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

பின்னர் அவர்  விழாவில் பேசியதாவது:- தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் வாய்க்கு வந்தபடி, பொத்தம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்து புலம்பி வருகிறார். இருபது சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை என்று கூறுகிறார். இந்த குற்றச்சாட்டுகளை அவரால் நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்து வெட்டி பேச்சு பேசுவதுபோல், வாய்க்கு வந்தபடி அவர் பேசலாமா? நாங்கள் அரசாங்கத்தில் இருப்பதால் மக்களிடம் உண்மையை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 389-யை நிறைவேற்றியுள்ளோம். மீதியுள்ள 116 வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். அரசிடம் மொத்தம் 34 துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் 2 அல்லது 3 திட்டங்களை தான் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதை தெரிந்தே, தெரியாத மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் பேசி வருகிறார். மேலும் அவர் மற்றொரு கட்சி தலைவர் அறிக்கையை அப்படியே ‘காப்பி’, ‘பேஸ்ட்’ செய்து, அதை வெளியிட்டுள்ளார். அதை பிரபல பத்திரிக்கைகள் தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய நாள், அதற்கான அரசாணை எண், பயனாளிகள் விவரங்களை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட தயாரா? முழுசா 10 ஆண்டுகள் தமிழகத்தை அதலபாதாளத்துக்கு தள்ளியதை மக்கள் மறந்திருப்பர் என நினைக்கின்றனர். மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் செல்போன், ஏரோபார்க், 10 ஆடை அலங்கார பூங்காக்கள், 58 வயது ஆடவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம், பொது இடங்களில் இலவச ‘வைஃபை’. இப்படி வெற்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தமிழக வளர்ச்சியை பாழாக்கினர்.

தற்போது தமிழகம் திவாலாகிவிட்டது என்று புது புரளியை கிளப்பி வருகின்றனர். தவழ்ந்து, தவழ்ந்து தமிழகத்தை தரைமட்டத்துக்கு அனுப்பியவர்கள், பொய்யாலும், அவதூறுகளாலும் வீழ்த்த முடியுமா ? என்று பார்க்கின்றனர். சாதாரணமாக தமிழகம் திவாலாகிவிட்டதாக கூறுகிறார். திவாலாக வேண்டும் என்பது தான் அவரது எண்ணமா? என்று கேட்க தோன்றுகிறது. அரசு செய்யும் செலவு எல்லாம் வெட்டி செலவு என்கிறார். அவர் கூறுவது மகளிர் உரிமை தொகையையா? காலை உணவு திட்டத்தையா?. எதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது எங்களுக்கு தெரியும். உங்களது கடந்தகால நிர்வாகத்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட வேண்டாம். நீங்கள் போடுகிற எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான்.

மக்கள் எங்களோடு செயல்பாடுகளையும், நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண்கள் கொடுக்கின்றனர். எங்களுக்கு அதுபோதும். திமுக ஆட்சிக்கு 13 அமாவாசைகள் தான் உள்ளது என்று சொல்லி காலாண்டரை கிழித்து வருகிறார். தற்போது அது தான் அவருடைய வேலையாக உள்ளது. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கை கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து