முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: த.வெ.க.வினருக்கு விஜய் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
tvk 2024-11-25

Source: provided

சென்னை: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள்  லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின்  தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது . இந்த கூட்டத்தில் த.வெ.க. கட்சிக்கு  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது .

இந்த நிலையில் , த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது, லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார் . முன்னதாக கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து