முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு தமிழகத்தில் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
Senthi-Balaji 2024-12-09

Source: provided

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு உறுதியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

கடந்த ஆண்டு 20ஆயிரம் மெகா வாட் அளவிற்கு உச்சபட்ச மின் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மின்சார வாரியம் தயாராகவும் உள்ளது. வருகிற கோடைக்காலத்தில் தடையில்லாமல் சீராக மின் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு விரைவில் புதிய டெண்டர் கோருவதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மாதாந்திர மின் கட்டண முறையை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு உறுதியாக நடைமுறைக்கு வரும்." இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து