முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு மசோதா தொடர்பான பார்லி. குழு கூட்டம்: ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி: வக்பு மசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இருந்து ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வக்பு திருத்த மசோதா மீதான அறிக்கையை விரைவாக ஏற்றுக்கொள்ள பா.ஜ.க. அழுத்தம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலைக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பாலுக்கு எதிராக தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், ஆ. ராசா, அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, முகமது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைப் படிக்க போதுமான நேரம் வழங்காமல் அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, காஷ்மீரைச் சேர்ந்த மத தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கை அழைப்பதற்கு முன்பு, கூட்டுக்குழு உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டு வக்பு திருத்த மசோதா மீதான அறிக்கையை விரைவாக ஏற்றுக்கொள்ள பா.ஜ.க. அழுத்தம் கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறினர். இதற்கு பா.ஜ.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூட்டம் கூடியபோது மிர்வாய்ஸ் தலைமையிலான குழுவினர், ஆஜராகினர்.

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் நசீர் உசேன் ஆகியோர் கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டுக் குழுவின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினர். வரைவு மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை உட்பிரிவு வாரியாக ஆராய்வதற்காக ஜனவரி 27-ம் தேதி திட்டமிடப்பட்ட கூட்டத்தை ஜனவரி 30 அல்லது ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக, வக்பு சட்டம்-1995ல் திருத்தங்கள் செய்வதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து