முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி. கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான இவர், நடிகையும், தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். இதனால் ரேணுகாசாமியை கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இதுகொலை தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கடந்த ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட பலருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 7 பேருக்கு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, நடிகர் தர்ஷன் உள்பட 7 பேருக்கு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து