முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைப் அலிகானை தாக்கியவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
saiif-ali-khan-----

Source: provided

மும்பை: நடிகர் சைப் அலிகான் வழக்கில் கைதான ஷரீபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷரீபுல்ல காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக இவ்வழக்கில் ஷரீபுல்லுக்கு மேலும் ஏழு நாள்கள் காவல் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. காவல்துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீபுல், நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

படுகாயமடைந்த சைப் அலி கானை வீட்டுப் பணியாளர்கள் மீட்டு, ஆட்டோவில் ஏற்றி பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து 5 நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சைப் அலிகான் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீடு திரும்பினார்.

சைப் அலி கானை கத்தியால் குத்திய ஷரீபுலை மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பையை அடுத்து உள்ள தாணே நகரின் புறநகர் வனப்பகுதியில் பதுங்கியிருந்தபோது காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். சைப் அலி கான் வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் முயற்சியில் நுழைந்த ஷரீபுல், அவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்டு வங்கதேசத்திலிருந்து டாக்கி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து