முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்: முதலில் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      விளையாட்டு
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : கபடி போட்டியின் போது  வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்தததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்பட வில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து