எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி பேட்டிங்கினால் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் வீரேந்திர சேவாக். அதிரடி தொடக்க வீரராக போற்றப்படுபவர். இவர் ஆர்த்தி என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆர்யவிர் மற்றும் வேதந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆர்யவிர் சேவாக், 19 வயதுக்கு குறைவானோருக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சேவாக் அவரது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அவரது மனைவி இல்லாதது குறித்து பல்வேறு யூகங்களை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின. இதனிடையே, சேவாக் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்துள்ளனர். இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக இணையதளம் முழுவதும் காட்டுத் தீயாய் செய்தி பரவி வருகின்றது. ஆனால், இந்த செய்திககள் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இருவர் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
______________________________________________________________________________________
ஷிவம் துபே டக் அவுட்
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், அடுத்து மும்பை அணி நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
______________________________________________________________________________________
ஐ.சி.சி. அணியில் 3 இந்திய வீரர்கள்
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு பேரும், நியூசிலாந்து அணியிலிருந்து இருவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, மாட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
______________________________________________________________________________________
வான்கடே மைதானத்தில் சாதனை
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வான்கடே மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 1975, ஜனவரி 23-ம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதற்கிடையே, வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை மும்பை கிரிக்கெட் சங்கம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வான்கடே மைதானத்தில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதில், வான்கடே மைதானத்தில் மொத்தம் 14,505 சிவப்பு, வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'வான்கடே மைதானத்தின் 50 ஆண்டுகள்'என்ற ஆங்கில வாக்கியம் அமைக்கப்பட்டது. இதில் புல் ஸ்டாப் வைக்க மட்டும் 44 பந்துகள் பயன்படுத்தப்பட்டது. அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி பெரிய ஆங்கில வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. கின்னஸ் சாதனைக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
______________________________________________________________________________________
ராஞ்சி கோவிலில் பிரார்த்தனை
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார். ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு வீரரும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான தோனி பேட்டிங் மட்டுமின்றி உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள தியோரி மா கோயிலுக்கு எம்.எஸ்.தோனி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அங்கு வந்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
இன்று 76-வது குடியரசு தினம்: டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
25 Jan 2025புதுடெல்லி: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி முப்படைகளின் அணிவக
-
76-வது குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்
25 Jan 2025சென்னை : 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை மெரினா கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-01-2025.
25 Jan 2025 -
திருவண்ணாமலையில் ராட்சத பாறை அகற்றம்
25 Jan 2025திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை துண்டு துண்டாக உடைக்கப்பட்டு டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.
-
வரும் 30ம் தேதி குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Jan 2025சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலகளாவிய உதவி திட்ட நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு
25 Jan 2025வாஷிங்டன் : உலகளாவிய உதவி திட்ட நிதியை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக அரசை கவிழ்க்க தொடர் சதி நடக்கிறது: திருமாவளவன்
25 Jan 2025சென்னை: தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர்: ஜம்மு காஷ்மீர் வரலாற்று வெற்றி
25 Jan 2025மும்பை : ரஞ்சி கோப்பை தொடரில் 7 இந்திய வீரர்கள் இருந்த மும்பை அணியை விழ்த்தி ஜம்மு காஷ்மீர் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
-
வெள்ளை மாளிகையில் உயர் பொறுப்பில் இந்தியர் நியமனம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
25 Jan 2025வாஷிங்டன் : வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளராக இந்தியர் குஷ் தேசாய்யை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
-
டெல்லியில் ரூ.500-க்கு சிலிண்டர்: பாரதிய ஜனதாவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி வெளியீடு
25 Jan 2025புதுடில்லி: டில்லியில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ஜ.க.வின் மூன்றாவது தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ளார்.
-
இஸ்ரேல் பணய கைதிகள் 2-ம் கட்ட பெயர் பட்டியல் : ஹமாஸ் அமைப்பு அறிவிப்பு
25 Jan 2025டெல் அவிவ் : இஸ்ரேல் பணய கைதிகள் 4 ராணுவ வீராங்களின் விடுதலைகளை காசா அறிவித்துள்ளது.
-
தை அமாவாசையையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
25 Jan 2025விருதுநகர் : தை அமாவாசையையொட்டி, சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மாணவி பலாத்கார வழக்கு: தமிழ்நாடு அரசின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
25 Jan 2025புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது ஜன., 27-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
-
வேட்பு மனுவில் தவறான தகவல்: இ.பி.எஸ்.சின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
25 Jan 2025சென்னை: தன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்த நிலையில் நாளை சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.
-
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2025சென்னை: கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அரிட்டாப்பட்டிக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி : அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்
25 Jan 2025சிவகங்கை : பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
-
வாக்கு நம் ஜனநாயகம், குடியரசை காக்கும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
25 Jan 2025சென்னை : உங்களின் வாக்கு நம் ஜனநாயகம் மற்றும் குடியரசை காக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்
-
மொழிப்போர் முடியவில்லை; இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
25 Jan 2025சென்னை : மொழிப்போர் இன்னும் முடியவில்லை. இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ரஷ்ய போரை ஜெலன்ஸ்கி தவிர்த்து இருக்க வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
25 Jan 2025வாஷிங்டன் : ரஷியவை-ஜெலன்ஸ்கி எதிர்த்து இருக்க கூடாது அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புனேவில் பரவும் அரியவகை நோயால் 73 பேர் பாதிப்பு
25 Jan 2025புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.
-
மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு
25 Jan 2025சென்னை: மாநில அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதை கண்டிக்கும் விதமாக குடியரசு தினத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்த
-
தமிழகத்தை சேர்ந்த வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் அறிவிப்பு : ஷோபனா - நல்லி குப்புசாமிக்கும் பத்ம விருதுகள்
25 Jan 2025புதுடில்லி : இந்தியாவின் உயிரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
-
சி.பி.ஐ. விசாரணை கோரி வி.சி.க. போராட்டம்: வேங்கைவயலில் போலீசார் குவிப்பு
25 Jan 2025வேங்கைவயல்: வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ.
-
அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு பகுதிநேர வேலைகளை கைவிடுகிறார்கள்
25 Jan 2025வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுகிறார்கள்.
-
தமிழக கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? - அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
25 Jan 2025மதுரை : கிராம சபைக் கூட்டங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.