முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: கவர்னருக்கு சபாநாயகர் அப்பாவு நன்றி

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

நாகர்கோவில் : பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என கவர்னர் இப்போதாவது வாய் திறந்து உண்மையை சொன்னதற்கு நன்றி என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பெரியார் பல சவால்களை சந்தித்தவர். உலகம் இருக்கும் வரை பெரியாரின் சிந்தனைகளை யாராலும் அழிக்க முடியாது. தற்போது மாணவ, மாணவிகள் பெரியாரின் சிந்தனைகள் குறித்த புத்தகத்தை வாங்கி படித்து அதன் வழி நடக்கின்றனர்.

பெரியார் காலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான கொள்கைகள் எடுக்கப்பட்டது என்றால், நம் முன்னோர்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் தான் அந்த கொள்கைகளை பெரியார் எடுத்துள்ளார். தமிழக கவர்னர் தனக்குரிய கடமைகளை செய்யவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி கவர்னர் நடக்கவில்லை. இதைத் தான் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக முதல்வரும் அதை பற்றித் தான் பேசி வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என கவர்னர் இப்போதாவது வாய் திறந்து உண்மையை சொன்னதற்கு நன்றி. இந்த கருத்து மூலம் தன்னை மாற்றுவதற்கு அவர் முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து