முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: எல்.முருகன் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2025      இந்தியா
Murugan 2024-05-31

Source: provided

புதுச்சேரி : டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யாத தி.மு.க. அரசு, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் தி.மு.க. 'நாடகம்' நடத்துகிறது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் அவர் செய்தியாளா்களுடன் பேசுகையில், மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைய அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தலைமையில் அந்த பகுதியை சோ்ந்த விவசாயிகள் தில்லி சென்று, மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து பேசினார். அப்போது டங்ஸ்டன் சுரங்கத்தால் அந்த பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு மற்றும் இதர பிற பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

இதையடுத்து பிரதமா் மோடியுடன் ஆலோசித்து மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார். அதற்காக மதுரை மேலூா் பகுதி மக்கள் சாா்பிலும், தமிழக மக்கள் சாா்பிலும் பிரதமா் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடைபெற்று வருகிறது. 2023-ஆம் ஆண்டு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டது. ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இந்த திட்டத்துக்கான எந்தவிதமான எதிா்ப்பை தி.மு.க. அரசு பதிவு செய்யவில்லை. மேலும் மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் எதிர்த்தது எனவும் டங்ஸ்டன் பிரச்னையில் தி.மு.க. 'நாடகம்' நடத்துகிறது என தெரிவித்தார்.

டங்ஸ்டன் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மக்கள் பக்கமே மத்திய அரசு நிற்கும். விரைவில் புதுடில்லியில் உலக திருக்குறள் மாநாடு நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்படும் என முருகன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து