முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      உலகம்
Pak 2023-11-03

Source: provided

இஸ்லாமாபாத் : நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இந்த துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பலூசிஸ்தான் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஷாஹித் ராண்ட் இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து