தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவைவிட ஆஸ்திரேலிய பிரதமருக்கு சம்பளம் அதிகம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், டிச.2 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவைவிட ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டுக்கு சம்பளம் அதிகமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டின் சம்பளம் விரைவில் 90,000 அமெரிக்க டாலர்கள் அதாவது 47,02,968 அதிகமாக இருக்கிறது. அவர் தற்போது வாங்கும் சம்பளத்துடன் இந்த கூடுதல் தொகையும் சேர்க்கப்பட்டால் அது அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகிவிடும். 

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக எம்.பி.க்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமலே இருந்துவந்தது. இதனால் எம்.பி.க்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைந்த அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களின் சம்பளம்கூட ரூ.73,15,728 ல் இருந்து 94,05,936 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. எம்.பி.க்களின் சம்பளம் இதைவிட அதிகமாகவும் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்படி ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டுவுக்கு 160 சதவீத சம்பள உயர்வு கொடுக்கப்படவிருக்கிறது. அதன்படி அவரது புதிய சம்பளம் ரூ. 2,45,59,944 ஆகும். அப்படி உயரும் பட்சத்தில் அது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சம்பளமான 2,09,02,080 மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூனின் சம்பளமான 1,15,48,399 ஆகியவற்றை விட அதிகமாகிவிடும்.  

ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் எம்.பி.க்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுமாயின் அது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago