முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை அப்துல்ஃபடாக் ஜான், சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். தொழில்நுட்பத் துறையில் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. இதன்மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்தவர்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அழகை மேம்படுத்தும்

பார்வைத்திறன் மேம்படவும், அழகுக்காகவும், கண்ணாடி அணிவதை விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர். இதை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அணிவதே நல்லது. கான்டாக்ட் லென்ஸ் அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.

பல்வேறு முத்திரைகள்

யோகாசனம் ஒரு அற்புதமான கலை. கை விரல்களால் செய்வதுதான் முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்வதால் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். வாயு முத்திரை செய்வதால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். சூன்ய முத்திரை செய்வதால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago