முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நீர்யானை, Hippopotamus

நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டதாகும். நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும். நீருக்குள்ளேயே பிறக்கும் குட்டிகள் நீருக்கு அடியில் இருந்தபடியே தாயிடம் பாலருந்துகின்றன. பார்க்க சாதுவாக இருந்தாலும் நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகிறது என்று அர்த்தம்.

கேள்விகுறியான மனிதர்களின் எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் வருகிற 2035-ம் ஆண்டிற்குள் மனிதர்களில் பாதி பேர் அலுவலகங்களில் வேலை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தற்போது ஐ.பி.எம். நிறுவனம் மனிதர்களைப்போல செயற்கை அறிவாற்றல் திறன் பெற்ற ரோபட்டுகளை உருவாக்கியுள்ளது. இந்த ரோபட்டுகள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளன. அவை, மருத்துவக் காப்பீடுக்கு அளிக்க வேண்டிய தொகைகளை கணக்கிட்டு மின்னல் வேகத்தில் தெரிவிக்கிறது. இந்த செயற்கை அறிவாற்றல் ரோபட்டுகள் மூலமாக  புகுகோகு என்ற மருத்து இன்சூரன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.8 கோடி செலவினத்தை மிச்சப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனத்தின் பாதி ஊழியர்களின் வேலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

குழந்தைக்கு எமன்

குழந்தைகள் வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருக்க முடியும். இதற்கு மாறாக ஸ்மார்ட்போனை விளையாட கொடுத்தால் இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும். மேலும் உடல்ரீதியாக, மனரீதியாகவும் பாதிப்புகுள்ளாகின்றனர்.

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

மவுன்டெயின் க்ளைம்பர்

மவுன்டெயின் க்ளைம்பர் பயிற்சி மூலம், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப் பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும். ஹை நீ  பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

பூமிக்கு அதிகமாக ஆக்சிஸனை தருவது எது தெரியுமா?

இப்படி சொன்னவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மழைக்காடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தாவரங்கள் என்பதுதான். ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே உண்மை. ஆனால் முழு உண்மை என்ன தெரியுமா... பூமிக்கு அதிகமான ஆக்சிஸனை தருவது கடல்தான். நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடல் பரப்பால் நிறைந்துள்ளது. மனிதனுக்கு 80 விழுக்காடு ஆக்சிஸனை கடல்தான் தருகிறது. பூமியின் நுரையீரல் என்று கூட கடலைச் சொல்லலாம். நாம் சுவாசிக்கும் காற்றில் பெருமளவை, மரங்களைவிடவும் கடலே உற்பத்தி செய்கிறது. காடுகளை போன்று கடல்களில் இருந்தும் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்தத் தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago