முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சோப்பு எப்போ வந்துச்சு..

நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

உடல்நலம் காக்க

காலை, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், தக்காளி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு அல்சரையும், கார உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள் நெஞ்செரிச்சலையும், வாழைப்பழம் இதய பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

உலகின் முதன் எஸ்எம்எஸ்

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பி உள்ளார். இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. இதில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியும் தற்போது இந்த எஸ்எம்எஸ் சுமார் 1.70 லட்சம் யூரோவுக்கு ஏலத்துக்கு வருகிறது என்பதுதான்.

செல்ஃபி செல்ஃப்ளை

செல்பீ பிரியர்களுக்காக செல்பி ஸ்டிக்கிற்க்கு பதிலாக மினி ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா அறிமுகமாகியுள்ளது. இந்த மினி ட்ரோனுக்கு செல்ஃப்ளை (SELFLY) என பெயரிட்டுள்ளனர். கைகளுக்கு அடக்கமான இந்த மினி ட்ரோனை, நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு உறையிலேயே வைத்து கொள்ள முடியுமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago