முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

இயற்கையின் அதிசயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகர் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக பாறைகள் சேகரித்து அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்காட்சியில் 1700 மனித முக பாறைகள் உள்ளன. சில முகங்கள் அழுத நிலையிலும், சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இவ்வகை பாறைகள்  சேகரிக்கப்பட்டன.

பேனாவின் மூடியில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

செல்போனே கதி என்று கிடக்கும் இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பேனா பெரிய அளவில் பழக்கத்தில் இருக்காது. பேனா மூடியை கடிக்கும் பழக்கம் உடைய நபர்களின் பாதுகாப்பு கருதி தான் இந்த துளை வைக்கப்படுகிறது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், உண்மைதான். பேனா மூடியை பழக்க தோஷத்தில் கடித்துக் கொண்டிருக்கும் நபர்கள், அதை ஏதேச்சையாக விழுங்கி விட்டால், அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. பேனா மூடியை விழுங்கி, அது மூச்சுக்குழாயை அடைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம், அந்த சமயத்திலும் கூட மூச்சுக்காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த துளை.

உலகிலேயே அதிகமான ரசிகர்கள் திரண்ட இசை கச்சேரி எது தெரியுமா?

அது 1993 இல் நடைபெற்றது. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் புகழ் பெற்ற கோபகபானா என்ற பீச்சில் அந்த கச்சேரி நடைபெற்றது. கச்சேரியின் நாயகன் ராட் ஸ்டீவர்ட் என்ற ராக் மற்றும் பாப் இசை பாடகர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் என்றால் இவரது இசை ஆல்ப சீடிக்கள் மட்டும் உலகம் சுமார் 2.5 கோடிக்கும் மேலாக விற்று தீர்ந்துள்ளன. அன்றைக்கு அந்த பீச் இசை கச்சேரிக்கு திரண்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 45 லட்சம் பேர். பிறகென்ன.. கச்சேரி கின்னஸிலும் இடம் பிடித்தது. உலக மக்களின் மனதிலும் இடம் பிடித்தது.

இலையுதிர் காலத்தில் இலையை உதிர்க்காத மரங்கள்

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. அவற்றில் சைப்ரஸ் வகை மரங்களும் அடங்கும். Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றை நாம் கிறிஸ்துமஸ் மரங்கள் என பொதுவாக குறிப்பிடுவோம். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.  நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை போல அல்லாமல் குளிர் பிரதேச மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்ப்பதில்லை என்பது ஆச்சரியம் தானே..

திப்பு சுல்தான் ஓவியம் ரூ.6.32 கோடிக்கு விற்பனை

இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago