முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் கிரிக்கெட் மைதானம் எங்கே அமைந்துள்ளது தெரியுமா.. அதுவும் இந்தியாவில்தான். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சைல் என்ற இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் தான் உலகிலேயே அதிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானமாகும். இது 1893 இல் உருவாக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான பாலம்

வியட்நாமில் டா நாங்கிற்கு வெளியே கல்லினால் வடிமைக்கப்பட்ட இரு கைகள் பாலத்தை தாங்குவது போல இருக்கும் ஒரு பிரமாண்டமான காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. கோல்டன் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் பாலம் பனாமா மலைகளுக்கு மேலே கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் அதாவது சுமார் 3280 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்தால் அந்த இடத்தை சுற்றியுள்ள பரந்த ஆழகான காட்சிகளை கண்டு ரசிக்கலாம். தங்க நிற வண்ணம் கொண்ட இந்த பாலம் ஊதா நிற லோபிலியா கிரிஸான்தமம்களால் (purple Lobelia Chrysanthemums ) வரிசையாக அமைந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 150 மீட்டர் நீளமுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தை தாங்கி கொண்டிருக்கும் செதுக்கப்பட்ட கைகள் தான் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் அழகிய காட்சியை தருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago