முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி

கூகுள், கடந்த 8 வருடங்களாக முயற்சி செய்து அக்டோபர் மாதம் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. முதலில் எக்ஸ் லேப் என பெயரிடப்பட்ட கூகுளின் இந்த தானியங்கி கார்கள் தற்போது வேமோ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த தானியங்கி கார் மூலம் களைப்பு, போதை, கவனச் சிறதல்கள் போன்றவற்றால் உருவாகும் விபத்துகளை தவிர்க்க முடியும்.கண் தெரியாதவர்கள் கூட தனியாக வேமோவில் எளிதாக பயணிக்கமுடியும் என்கிறது கூகுள். ஜிபிஎஸ் செட்டிங்க்ஸ் மூலம் இந்த வகை கார்கள் சாலைகளில் உள்ள போக்குவரத்து சூழல், சிக்னல் போன்றவற்றை உணர்ந்து செயல்படுகின்றன.

நீல நிறத்தில் ஒளிரும் உறைபனி ரஷ்யாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் கண்ணை பறிக்கும் வெள்ளை நிறத்தில் உறைபனி இருப்பதை நம்மில் சிலர் நேரிலும், படங்களிலும் பார்த்திருப்போம். சுவிசாக இருந்தாலும், இமயமலையாக இருந்தாலும், துருவ பிரதேசமாக இருந்தாலும் பனி என்றாலே வெள்ளை நிறம் தான் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கை தகரப் போகிறது. ஆம், ரஷ்யாவில் உள்ள ஆர்டிக் பிரதேசத்தில் முதன் முறையாக நீல நிறத்தில் ஜொலிக்கும் பனியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

கடல் மட்டத்துக்கும் கீழே...

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல, கேரளத்தின் நெற்களஞ்சியமாக உள்ள குட்டநாட்டில், அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கின்றன. ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த குட்டநாடு, கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி இதுவே. ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும் இங்கு, நெல், வாழை ஆகியன முதன்மையாக பயிரிடப்படுகின்றன. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

வறட்டு இருமலுக்கு…

மாதுளம் பழச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து பருகினால் வறட்டு இருமல் சரியாகும். நாட்டு மருந்து கடைகளில் திப்பிலி கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் வறட்டு இருமல் குணமாகும். மேலும், இளஞ் சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருத்தினால் வறட்டு இருமல் குணமாகும்.

சாணத்திலிருந்து மின்சாரம் தயாரித்து 50 தெருவிளக்குகளை எரிய செய்யும் கிராமம்

நவீன அறிவியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த செய்திதான் சாட்சி. முன்பு மாற்று எரிபொருள் என்ற வகையில் சாண எரிவாயு முறைகள் பின்பற்றப்ப்டடன. பெரும்பாலும் தற்போது அதையாரும் தொடர்வதில்லை என்ற போதிலும் இன்றைக்கும் அது ஒரு சிறந்த மாற்று எரிபொருள்தான். அதே போல மாற்று எரிசக்தி என்ற முறையில் தற்போது அறிவியலில் புதிய முறையாக மாட்டுச் சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை மேல்நாட்டு பண்ணைகளில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் சண்டிகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தொடங்கப்பட்ட போதிலும் இன்னும் பரவலாகவில்லை. இதற்கு முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள வரதராஜபுரம் ஊராட்சி திகழ்கிறது. இங்கு கால்நடை கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள 50 தெரு விளக்குகள் எரிய வைக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 12 மணிநேரம் இந்த ஆற்றலை  பயன்படுத்தி விளக்குகள் எரிகின்றன. இதை இன்னும் திட்டமிட்டு விரிவாக்கினால் கிராமத்துக்கான மின் தேவையையே சமாளிக்கலாம் என்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago