உலக வரலாற்றில் 1945 ஆகஸ்ட் 9 ஐ மக்கள் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதே போல மறுநாள் ஆகஸ்ட் 10. ஏன்? கொடிய அமெரிக்கா உலகையே உலுக்கும் வகையில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அணுகுண்டை இனி பயன்படுத்தினால் உலகம் என்னவாகும் என்பதற்கு துயர சாட்சியாக நின்ற நாள். சுமார் 1.25 லட்சம் பேர் உயிரிழந்தனர். தலைமுறை தலைமுறையாக அதன் கதிர்வீச்சு பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதிலும் ஒரு அதிசயம் நடந்தது. அணுகுண்டு வெடித்த போது சற்று தொலைவில் இருந்த ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் தனது 93 வயது வரை வாழ்ந்து அந்த துயர சம்பவத்தின் உயிர் சாட்சியாக விளங்கினார். அவர் பெயர் சுடோமு யாமகுச்சி. அணுகுண்டு வெடித்த போது அவருக்கு வயது 29. கடந்த 2009 இல் தனது 93 வயதில் சிறுநீரக மற்றும் வயிற்று புற்றுநோயால் மறைந்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.
உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.
மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் குறிப்காக, மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவதுதான் என்பது. முதலில் இந்த சோதனையை ஒரு சுண்டெலியின் மீது நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மூலம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.
உலகிலேயே அதிக பொருட்செலவில் படங்களை தயாரிக்கும் துறையாக அமெரிக்காவின் ஹாலிவுட் விளங்கி வருகிறது. இங்கு அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் எது தெரியுமா...நீங்கள் பல்வேறு படங்களை கற்பனை செய்தால் அதெல்லாம் குறைவாகத்தான் இருக்கும். பைரேட் ஆஃதி கரீபியன் என்ற திரைப்படம் தான் இதுவரை எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்துக்குகாக பட நிறுவனம் 375 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் மூவாயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ஹாலிவுட்டில் அதிக பொருள் செலவில் படம் எடுப்பற்கான பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி வரைதான் அதாவது 65 மில்லியன் டாலர் என்ற அளவில்தான் திட்டமிடப்படும். அப்படியானால் இந்த படத்தின் செலவை நினைத்து பாருங்கள்...ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
ராஜஸ்தான் மாநிலம ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தின் சிறப்பு என்ன தெரியுமா.. இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம். கடந்த 2019 பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான பெண் ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
நிறங்கள் மூன்று விமர்சனம்
25 Nov 2024துருவங்கள் பதினாறு படம் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன் அதன் பிறகு அவர் இயக்கத்தில் வெளியான மாறன் மற்றும் மாபியா சாப்டர் ஒன் ஆகிய பட
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
25 Nov 2024பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு இ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-11-2024.
25 Nov 2024 -
லைன்மேன் விமர்சனம்
25 Nov 2024மின்சாரம் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்புகளை கையாளும் சுப்பையா மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோரின் வாழ்க்கையை பற்றி பேசுகிறது இப்படம்.,
-
தங்கம் விலை குறைவு
25 Nov 2024 -
ஜீப்ரா விமர்சனம்
25 Nov 2024தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் ஜீப்ரா.