முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை : ராகுல் காந்தி கருத்து

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, ''நீட் தேர்வு முறைகேட்டால் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் குடும்பங்களை பாதித்துள்ளது. லட்சக்கணக்கான குடும்பங்களை கவலை அடையச் செய்துள்ளது மிக முக்கியமான பிரச்னை. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மக்களவை நேற்று காலை கூடியதும், முதலில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனு மூலம் கோரிக்கை வைத்தனர். ராகுல் காந்தி உள்ளிட்ட இன்டியா கூட்டணி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையுடன் சேர்த்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

பீகார் போன்ற மாநிலங்களில் வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் நீட் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடைபெறவிருந்த பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித்தேர்வு (யுஜிசி-நெட்) மற்றும் நீட் முதுகலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து