முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்று வடிவிலான ஐ.சி.சி.யின் உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறி ரோகித் சாதனை

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      விளையாட்டு
India 2024-05-11

Source: provided

பார்படாஸ் : 3 வடிவிலான ஐ.சி.சி. உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய 2-வது கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிடம்... 

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும். கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

2வது கேப்டன்.... 

இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வெற்றி...

முன்னதாக நேற்று முன்தினம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் 56 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

72 போட்டிகளில்... 

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பாபர் அசாமின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார். அந்த வகையில் பாபர் அசாம் 85 போட்டிகளில் கேப்டனாக இருந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளார். ரோகித் 61 போட்டிகளில் 49-ல் வெற்றி பெற்று இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 72 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து