முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனந்தக்கண்ணீரில் ரோகித்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் வென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் ரோஹித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது.

அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2011, 2013இல் ஐசிசி கோப்பைகளை வென்றன. பிறகு இதுவரை எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள். வெற்றிக்குப் பிறகு ரோகித் ஓய்வறையில் அழுகும்போது விராட் கோலி தேற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கோலி, ரோஹித் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தப் படங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

______________________________________________________________________________

வாகனை கலாய்த்த அஸ்வின்

இந்திய அணியின் வெற்றிகுறித்து மைக்கேல் வாகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி. இதுவரை நடந்த போட்டிகளில் மிகச்சிறந்த அணியாக இந்தியா உள்ளது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும். இந்தியா இது போன்ற குறைவாக சுழலும் ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் மைக்கேல் வாகனை இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கமாய் கலாய்த்துள்ளார். நகைச்சுவை மற்றும் அறிவுபூர்வமாக வெற்றிபெற்றதாக அஸ்வின் அதில் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், " ∫ 1 dx = x + C. ∫ a dx = ax+ C. ∫ xn dx = ((xn+1)/(n+1))+C ; n≠1... இதனால் தான் இந்தியா வென்றது" என்று அதில் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

______________________________________________________________________________

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் தொடங்கியது. இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும். இதை அடைந்த விட்ட கிரண் பஹல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார் 'ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை எதுவும் கிடையாது' என்று 23 வயதான கிரண் பஹல் நெகிழ்ந்தார்.

______________________________________________________________________________

4)  டி20 உலகக்கோப்பை அரையிறுதி: இந்திய அணியில் சிறந்த பீல்டர் விருது வென்ற ரிஷப் பண்ட் : ரிசப் பண்டுக்கு பி.சி.சி.ஐ. விருது 

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிறந்த பீல்டராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் வழங்கி கவுரவித்தார். ரிஷப் பண்ட் இந்த விருதை பெறுவது 2-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

______________________________________________________________________________

தவறு செய்துவிட்டேன்: பட்லர்

மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இருந்தபோதிலும் மொயின் அலிக்கு பந்துவீச வாய்ப்பளிக்காமல் தவறு செய்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாதது ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானவர்களே. 140 அல்லது 150 ரன்களுக்குள் இந்திய அணியை கட்டுப்படுத்திவிடலாம் என நினைத்தோம். ஆனால், அவர்கள் அதிக ரன்கள் குவித்துவிட்டனர்.

திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. பவர் பிளேவில் எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன். பந்துவீச்சில் மொயின் அலியை பயன்படுத்தவில்லை. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக இருந்ததால், அவரைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அவரைப் பந்துவீச்சில் பயன்படுத்தாமல் தவறு செய்துவிட்டேன் என்றார்.

______________________________________________________________________________

கோலி மோசமான சாதனை 

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் மிக மோசமான வீரராக மாறியுள்ளார் விராட் கோலி. அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. கடைசி 6 போட்டிகளிலும் மோசமாக விளையாடிய விராட் கோலி முக்கியமான இந்தப் போட்டியிலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் ரோகித் சர்மா நன்றாக விளையாடியதால் இந்திய அணி நல்ல ரன்களை குவிக்க முடிந்தது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியின் ரன்கள் 1,4,0,24,37,0,9 என மொத்தமாக 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக 10.71 என இருக்கிறது.

குறைந்தபட்சம் 6 போட்டிகள் கொண்ட டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான வீரராக விராட் கோலி உருவாகியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கோலியும் 2ஆவது இடத்தில் வங்கதேசத்தை சேர்ந்த தன்ஜித் ஹாசன் சராசரி 10.86 ஆகவும் இருக்கிறார். டி20 உலகக் கோப்பையில் மோசமான சராசரி கொண்ட பட்டியல்: 1. விராட் கோலி - 10.71 (2024), 2. தன்ஜித் ஹாசன் - 10.86 (2024), 3. தமிம் இக்பால் - 11.86 (2014),  4. கைல் கோட்சர் - 12.00 (2021).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து