முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி கோவில் கட்டுமானத்தில் குளறுபடி: 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த யோகி ஆதித்யநாத்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      இந்தியா
Yogi 1

Source: provided

லக்னோ : அயோத்தி கோவில் கட்டுமானத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 3 பொதுப்பணித்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பா.ஜ.க. அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22-ம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  

 இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். 

ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். 

மேலும் கோவிலுக்கு செல்லும் 14 கி.மீ.   நீளம் கொண்ட  பிரதான ராம் பாத் சாலையில் பொத்தல்கள் ஏற்பட்டு மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினர். இந்த நிலையில் தற்போது, யோகி ஆதித்தனாத் அரசு மூன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை  இடைநீக்கம் செய்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து