முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.ஜி.சி. நெட் தேர்வுக்கான புதிய கால அட்டவணை : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
UGC

Source: provided

 சென்னை : என்.சி.இ.டி., யு.ஜி.சி நெட் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 

நாட்டின் பல்கலைக் கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற யு.ஜி.சி நெட் தேர்வு அவசியம் இதில் தேர்ச்சி பெற்றால் தான் மேற்கூறிய சலுகைகள் கிடைக்கும். ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இரண்டுமுறை நெட் தேர்வு நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. 

9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதிய நிலையில், இந்த தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.21-ம் தேதி முதல் செப்.4-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும். சி.ஐ.எஸ்.ஆர். - யு.ஜி.சி. நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். என்.சி.ஈ.டி. தேர்வு, ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்றும் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து