முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தளவாய் சுந்தரத்தை மீண்டும் நியமனம் செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் அவர்கள், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

தளவாய்சுந்தரம் அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் என். தளவாய்சுந்தரம், B.Sc., B.L., M.L.A., அவர்கள் (முன்னாள் அமைச்சர்) நேற்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து