முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சேலம், எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது., காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லாததால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை. எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது. காவல் அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாது. ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.  எந்தெந்த துறைகளில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து