முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாதவிடாய் விடுப்புகளை கட்டாயமாக்கினால் மகளிருக்கு பாதகமாக அமையும்: சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுதில்லி : பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.

பணியிடங்களில், வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு குறித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கைகளை வைக்கலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, மாதவிடாய் காலத்தில் வேலை செய்யும், பெண்களுக்கு விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கினால், பணியிடங்களில் அவர்களை ஒதுக்கிட வழிவகுத்துவிடும். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என்று மாதவிடாய் கால விடுப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாதவிடாய் விடுப்பு என்பது மத்திய அரசின் விவகாரம். எனவே சம்பந்தப்பட்ட மனுதாரர், பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கை வைக்கலாம் என்று நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து