முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உடல் கருகி 2 தொழிலாளி பலி

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      தமிழகம்
Fireworks-factory 2024-07-0

Source: provided

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் நேற்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்.

 

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது இது நாக்பூர் லைசன்ஸ் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான  பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அந்த அறை வெடித்து சிதறியது. அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரோஜா , சங்கரவேல் 2 தொழிலாளர்கள் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காமடைந்த சரோஜா மற்றும் சங்கரவேல் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து