முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவு?

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை :  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் புதிய கவர்னராக நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பணியாற்றி வருகிறார். அவர் மீது தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஏற்கனவே சில முறை, கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க., சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், இந்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, சில வரிகள் தவிர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கவர்னரை குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், தமிழகத்தில் கவர்னர் மாற்றப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து