முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை: உ.பி.யின் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ்குமாருக்கு விருது

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      இந்தியா
Dinesh-Kumar 2024 08 19

Source: provided

காஜியாபாத் : உத்தரப்பிரதேசத்தின்  ஐ.பி.எஸ். தமிழரான பி.தினேஷ்குமாருக்கு பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது. 

காஜியாபாத்தின் கூடுதல் காவல் ஆணையரான அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அதிக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் சிறப்பாக பணிபுரியும் காவல் துறையினருக்கு மத்திய அரசால் பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற பாராட்டு விருதுகள் மாநில அரசுகள் சார்பிலும் வழங்கப்படுகின்றன. இவை, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் வழங்கப்படுகின்றன. 

உ.பியின் காவல்துறை தலைமை இயக்குநரால் (டி.ஜி.பி) பிளாட்டினம் பாராட்டு விருது தமிழரான ஐ.பி.எஸ். பி.தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.  இதை, காஜியாபாத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் அதன் காவல் ஆணையர் அஜய் குமார் மிஸ்ரா வழங்கினார். 

டெல்லியை ஒட்டியுள்ள உ.பி.யின் காஜியாபாத் கிரிமினல் நடவடிக்கைகள் அதிகம் கொண்டது. கடந்த நவம்பர் 2022-ம் ஆண்டு முதல் அதன் கூடுதல் காவல் ஆணையராக  தமிழரான பி.தினேஷ்குமார் உள்ளார்.

இங்கு  தினேஷ்குமார் உ.பி.யில் அதிக எண்ணிக்கையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுவரையும் 2024-ல்  8 மாதங்களில் 458 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகினர்.  

இது குறித்து  ஐ.பி.எஸ். அதிகாரியான பி.தினேஷ்குமார் கூறும்போது, நற்பணிக்காக கிடைத்த இந்த விருதிற்கு முக்கிய காரணம் எனது காவல்துறை குழுவினரின் ஆதரவு. எனவே, இந்த மூன்றாவது விருதை காஜியாபாத் காவல் துறையினக்கு சமர்ப்பிக்கிறேன். 

தமிழர்கள் தேசிய அளவிலும், சர்வதேசங்களில் சாதனைகள் புரிந்து தமிழ்நாட்டின் புகழைப் பரப்ப வேண்டும் என்பதும் எனது விருப்பம்  எனத் தெரிவித்தார்.

மேட்டூரிலுள்ள கொளத்தூரின் சின்னதண்டா கிராமத்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தினேஷ்குமார். கோவையின் அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2008-ல் இளநிலை பட்டம் பெற்றவர். குடிமைப்பணி தேர்வு எழுதியவர், 2009-ல் முதல்முயற்சியிலேயே ஐ.பி.எஸ். பெற்று உ.பி. பிரிவில் இணைந்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து