முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். தலைவர் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு: கார்கே வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      இந்தியா
Rahul-Karkee 2024-10-26

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று  2 ஆண்டுகள் நிறைவடைந்தது. 82 வயதான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

கார்கேவின் வீட்டிற்கு ராகுல்காந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதோடு கேக் வெட்டி கார்கேவுக்கும், அங்கு இருந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வழங்கினார். அவர் தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் பல தேர்தல் வெற்றிகளை பெற்றது. 

2019 பொது தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டும் பெற்றது. தற்போது நடந்த தேர்தலில் மக்களவையில் கட்சியின் பலம் 99 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து