முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாட்டில் இன்று பிரியங்கா பிரச்சாரம் தொடங்குகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      இந்தியா
Priyanka 2024-10-23

Source: provided

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த 23-ம் தேதி தனது சகோதரரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு டெல்லி சென்ற அவர், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட இன்று 28-ம் தேதி வயநாடு  தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். 

இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ பயண விவரங்களை வண்டூர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் குமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி இன்று வருகிறார். பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியில் உள்ள மீனங்காடி பகுதியில் இருந்து அவர் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பனமரம் மானந்தவாடி, கல்பெட்டாவில் வைத்திரி அருகே பொழுதானா பகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

நாளை 29-ம் தேதி காலை 10 மணிக்கு திருவம்பாடியில் எங்கப்புழா பகுதியில் இருந்து அவர் பிரச்சாரம் தொடங்குகிறார். ஏர்நாடு, வண்டூர், மலப்புரம் என 7 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு நீலம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

தொகுதியில் ஏற்கனவே தொகுதி அளவிலான மாநாடுகளை கட்சியினர் முடித்து விட்டனர். பூத் அளவிலான பணிகள் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடையும். பிரியங்கா காந்தி தனது 3-வது கட்ட சுற்றுப்பயணத்தின் போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து