முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சலில் 6,488 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      இந்தியா
Accident-1

Source: provided

திருப்பதி : அருணாச்சல பிரதேசத்தில் 6,488 மீட்டர் உயரமுள்ள கோரிசென் மலையில் ஏறி தெலுங்கானா மாணவர் யஷ்வந்த் சாதனை படைத்துள்ளார். 

தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டம், பழங்குடியினத்தை சேர்ந்தவர் யஷ்வந்த். இவர் அங்குள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 19-ம்  தேதி யஷ்வந்த் மகாராஷ்டிரா, குஜராத், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த 7 பேர் குழுவாக சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கோரிசென் மலைக்கு சென்றனர்.

6,488 மீட்டர் உயரம் உள்ள கரடு முரடான மலையில் ஏறி உச்சிக்கு சென்றார். யஷ்வந்துடன் வந்தவர்கள் மலையேற முடியாமல் பாதி வழியில் தவித்தனர். மலையின் உச்சிக்குச் சென்ற யஷ்வந்த் அங்கிருந்த உச்சியில் இந்திய தேசிய கொடியை நாட்டினார்.

ஏற்கனவே 2016-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் மட்டுமே கோரிசென் மலை ஏறினர். ராணுவ வீரர் அல்லாத கல்லூரி மாணவர் ஒருவர் இந்த மலையை ஏறியது இதுவே முதல்முறை. மலை உச்சியில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது. பெண்களை மதிப்போம். வன்முறையை நிராகரிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை காட்டினார். மேலும் தற்போது 8,849 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து