முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025 ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவாரா?

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      விளையாட்டு
Dhoni 2024-03-12

Source: provided

மும்பை : அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவாரா? என சந்தேகம் நிலவும் நிலையில் அதற்கு அவரே விளக்கமளித்துள்ளார்.

மெகா ஏலம் நடத்த....

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விளையாடுவாரா?

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக டோனி விளையாடுவாரா? என சந்தேகம் நிலவுகிறது. 43 வயதான டோனி தற்போது ஒரு வீரராக மட்டுமே ஐ.பி.எல் தொடரில் ஆடி வருகிறார். இந்நிலையில், தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து டோனி கூறியதாவது, அடுத்த சில ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவு நான் விளையாடும் கிரிக்கெட்டை ரசிக்க விரும்புகிறேன். எங்களது சிறுவயதில் மாலை 4 மணிக்கு விளையாட்டை நாங்கள் வெளியே சென்று விளையாடி ரசிப்போம்.

கடினமாகிவிடும்... 

ஆனால் தொழில் முறை விளையாட்டை விளையாடும்போது ஒரு விளையாட்டை (கிரிக்கெட்டை) ரசிப்பது என்பது கடினமாகிவிடும். இது எளிதான விஷயம் அல்ல. இதில் உணர்ச்சிகளும், அர்ப்பணிப்பு உணர்வுகளும் நிறைய இருக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளுக்கு விளையாட்டை ரசிக்க விரும்புகிறேன். 2 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக நான் ஒன்பது மாதங்கள் உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு திட்டமிடல் அவசியம், அதே நேரம் கொஞ்சம் அமைதியாக இருப்பதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து