முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுதி நேர ஆசிரியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : தீபாவளியை முன்னிட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 15,000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை பெற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் மாத சம்பளத்தை முன்னதாக வழங்கவேண்டும் அல்லது ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் அல்லது வட்டியில்லா முன்பணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். 

அதற்கு தி.மு.க. அரசு செவி சாய்க்க மறுக்கிறது என்பது வேதனை அளிக்கும் செயல் ஆகும். அறப்பணி செய்யும் ஆசிரியர்களை அலைய விடுவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, தீபாவளிப் பண்டிகையை பகுதி நேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை ஊக்கத் தொகையாக வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று  வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து