முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கோரி வங்கதேசத்தில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      உலகம்
Bangladesh 2024-10-27

Source: provided

டாக்கா : வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். 

இதையடுத்து, அங்கு முகமது யூனஸ் தலைமையில் இடக்கால அரசு அமைந்தது. எனினும், அங்குள்ள இந்துக்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. துர்கா பூஜாயின் போதும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.

இந்நிலையில், சனாதன் ஜக்ரன் மஞ்ச் சார்பில் சிட்டகாங் நகரில் உள்ள லால்டிகி மைதானத்தில்  மாபெரும் பேரணி நடைபெற்றது. சிறுபான்மையினருக்கு உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர்.

சனாதன் ஜக்ரன் மஞ்ச் அமைப்பினர் வங்கதேச அரசுக்கு 8 கோரிக்கைகளை வைத்துள்ளனர். இவற்றை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.  இந்தப் போராட்டம் தொடர்பான வீடியோவை வங்கதேச எழுத்தாளரும் நாடு கடந்து வசித்து வருபவருமான தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து