முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்குங்கள் : வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அட்வைஸ்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      இந்தியா
Chandrachut-2

Source: provided

புதுடெல்லி : உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு முறையான ஊதியத்தை வழங்குங்கள் என்று வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவுறுத்தியுள்ளார்.

இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்ப கால சட்டப்பணியில் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆல் இந்தியா ரேடியோவிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"எந்த ஒரு தொழிலிலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அந்த வகையில், சட்டத் தொழிலில் முதல் மாதத்தில் கிடைக்கும் சம்பளம் என்பது மிக அதிகமாக இருக்காது. இளம் வழக்கறிஞர்கள் தங்கள் ஆரம்ப கால சட்டப்பணியில் சந்திக்கும் சவால்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் முறையாக ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்காக வருகிறார்கள். அதே நேரம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது. எனவே இது இருதரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியது என்பது மூத்த வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து