முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடிய பீகார் முதல்வர் நிதீஷ்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      இந்தியா
nitish-kumar

Source: provided

பாட்னா : பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடியது கவனம் பெற்றுள்ளது.

பீகார் முதல்வரும், ஜக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பிகாரில் உள்ள ஒரு மரத்திற்கு ராக்கி கட்டி விருக்ஷா சுரக்ஷா திவாசைக் நிதீஷ் குமார் கொண்டாடியிருக்கிறார்.

அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பசைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிக்கை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பான அவருடைய எக்ஸ் பதிவில், ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு மற்றும் பாசத்தின் பண்டிகையாகும். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநில மற்றும் நாட்டு மக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய தலைநகரில் பள்ளி மாணவிகளுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து