முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்: மற்ற தலைவர்கள் குறித்து பேசுவது தொடர்பாக தமிழிசை கோரிக்கை

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2024      அரசியல்
Tamilsai 2023-11-03

சென்னை, கட்சித் தலைவர்களைப் பற்றி விமரிசிக்கும்போது வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்று கோரிக்கை வைப்பதாக, முன்னாள் கவர்னரும், பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை அண்ணாமலைக்கு மறைமுகமாக அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சித்துப் பேசியிருந்தார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நாசூக்காகவே பேசியிருந்தார்.இன்னொரு தலைவரின் சொற்பொழிவுக்கு நான் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அவரவர்களுக்கு என்று ஒரு பாணி இருக்கும். அவர் பேசிய மேடையில் நான் இருந்தேன்,  கட்சித்தலைவர் என்ன சொன்னார் என்று கேட்டால், அவரவருக்கு என்று ஒரு பாணி இருக்கும். இது அவரது பாணி. அவ்வளவுதான்.

தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். ஒரு மாநில தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அந்த மரியாதையை எதிர்க்கட்சித் தலைவருக்கும் கொடுக்க வேண்டும். மாநில தலைவருக்கு மரியாதை கொடுக்கிறேன் என்றால் அது அவரது பாணி என்று கடந்து சென்றுவிடுவேன். மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்க வேண்டாம் என்பது என் கோரிக்கை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து