முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யகுமார் யாதவுக்கு வாழ்த்து

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      விளையாட்டு
14-Ram-58-copy

Source: provided

தனது 34-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் நேற்று அவரது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் அவர், இதுவரை டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 2432 ரன்கள் குவித்துள்ளார். அதில் 4 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் அடங்கும். இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 773 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக அவர் இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் வகித்ததும் குறிப்பிடத்தக்கது.  அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் பெரிதும் உதவியாக இருந்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 199 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இறுதிப்போட்டியில் எல்லைக்கோட்டில் அற்புதமாக கேட்ச் பிடித்து இந்திய அணி கோப்பையை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.

நேற்று 34-வது பிறந்தநாளை கொண்டாடிய சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியும், இந்திய அணியின் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 3213 சர்வதேச ரன்கள், 4 சர்வதேச டி20 சதங்கள். இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக நீங்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தருவதைப் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்களது கிரிக்கெட் பயணம் சிறக்க எனது வாழ்த்துகள் என்று ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அபார வெற்றி

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.முதல் விக்கெட்டுக்கு மேத்யூ ஷாட்-ஹெட் ஜோடி 52 ரன்களை சேர்த்தது. ஷாட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து ஜேக் பிரேசர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பில் சால்ட் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.பொறுப்புடன் ஆடிய லிவிங்ஸ்டோன் அரை சதமடித்தார். அவர் 47 பந்தில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தேல் 44 ரன்கள் சேர்த்தார்.இறுதியில் இங்கிலாந்து 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. , டி20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து