முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்து சர்ச்சை கேள்வி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      தமிழகம்
TNPSC 2024-09-14

Source: provided

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் கவர்னர் குறித்த கேள்வி சர்ச்சையாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் கவர்னர்  குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற கவர்னர்  என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கவர்னர்  அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், அதன் காரணமாக கவர்னர்  என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு, கவர்னர்  இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சனாதானம் குறித்து பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என கவர்னர்  ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை நேற்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து