முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஸ் ஒலிம்பியாட் தொடர்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      விளையாட்டு
14-Ram-52-copy

Source: provided

புத்தபெஸ்ட்:ஹங்கேரியில் தொடங்கியிருக்கும் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ஆவது சுற்றிலும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன. இந்திய அணிகளுக்கு இது ஹாட்ரிக் வெற்றி என்பது குறுப்பிடத்தக்கது.

2 அணிகளும்...

மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. முதல் சுற்றில் 4-0 என வென்ற இந்திய ஆடவர் அணி 2-வது சுற்றில் 4-0 என ஐஸ்லாந்தை வீழ்த்தியது. 3-வது சுற்றில் இந்திய ஆடவா் அணி - ஹங்கேரி ‘பி’ அணியுடனும், மகளிர் அணி - சுவிட்ஸா்லாந்துடனும் மோதின. 3-வது சுற்றில் 3-1 என மகளிர் அணியும் ஆடவர் அணி 3.5 -0.5 என புள்ளிகள் அடிப்படையிலும் வெற்றி பெற்றன.

ஆடவர் அணி...

மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 3 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல்நிலையில் உள்ளன. 12 போட்டிகளில் இந்திய ஆடவர் அணி இதுவரை 0.5 புள்ளிகள் மட்டுமே எதிரணியினருக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3 நாள்களாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய ஆடவர் அணி. 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிகள் அசத்தி வருகின்றன. செப் 23 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து