முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்:இந்திய அணியில் மாற்றமா..?பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      விளையாட்டு
14-Ram-51-copy

Source: provided

சென்னை: இந்திய அணியின் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் சிறப்பாக்க உதவி செய்ய வேண்டும் என நினைப்பதாவுகம் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

2 போட்டிகள்... 

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் ஏற்கனவே தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

மிகவும் சிறப்பாக... 

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது எனவும், இந்திய அணியில் பெரிய அளவில் எந்த ஒரு மாற்றமும் செய்யத் தேவையில்லை எனவும் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணியில் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியை அதேபோல தொடர்ச்சியாக செயல்பட வைப்பதே எங்களது இலக்காக உள்ளது. அணியில் தரமான மூத்த வீரர்கள் இருப்பது எங்களது அதிர்ஷ்டம். அணியில் உள்ள வீரர்களுக்கு உதவியாக இருந்து, அவர்கள் சிறப்பாக செயல்பட ஆலோசனைகள் வழங்குவதே எங்களது வேலையாக இருக்கும்.

மிகவும் முக்கியம்... 

இந்திய அணி வீரர்கள் சிலருடன் விளையாடிய அனுபவம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது. வீரர்களிடம் நன்றாக பழகி அவர்களிடம் நட்பாக இருப்பது மிகவும் முக்கியம். வீரர்களின் பலம் என்னவென்று தெரிந்தால்தான், எதிர்வரும் தொடர்களுக்கு அவர்களுக்கான இலக்குகளை அமைக்க முடியும். இந்திய கிரிக்கெட் நிறைய திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது என்றார்.

309 விக்கெட்டுகள்... 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மோர்னே மோர்கல் அந்த அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து 544 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் 309 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து