முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா மாநிலங்களில் ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      இந்தியா
Modi-1 2024-09-14

Source: provided

புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடி இன்று (15-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை ஜார்க்கண்ட், குஜராத், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களுக்கு சென்று ரூ.12,400 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி இன்று (15-ம் தேதி) காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் செல்கிறார். அங்கு ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். டாடாகர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் டாடா கர்-பாட்னா வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் 5 வந்தே பாரத் ரெயில்களையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் பயனாளிகள் 20 ஆயிரம் பேருக்கு அவர் அனுமதி கடிதம் வழங்குகிறார்.

நாளை (16-ம் தேதி) காலை 9.45 மணிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு மோடி செல்கிறார். அவர் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார். 10.30 மணிக்கு முதலீட்டாளர் சந்திப்பு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 1.45 மணிக்கு அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் செல்கிறார். மாலை 3.30 மணிக்கு ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

குஜராத்தில் இருந்து மோடி 17-ம் தேதி காலை 11.15 மணிக்கு ஒடிசா செல்கிறார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற பயனாளிகளுடன் அவர் உரையாடுகிறார். 12 மணியளவில் பிரதமர் மோடி ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதோடு ரூ.3,800 கோடி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து