முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயது படிப்படியாக உயர்கிறது

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      உலகம்
China 2024-09-14

Source: provided

பெய்ஜிங் : சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்சுவாவில் வெளியான தகவலில்., நாட்டில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்துவது குறித்த முடிவுக்கு 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 2025-ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளில் ஆண்களுக்கான சட்டபூர்வ ஓய்வூதிய வயது 60-ல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். பெண் பணியாளர்களின் ஓய்வு வயது 55-ல் இருந்து 58 ஆகவும், பெண் தொழிலாளர்களின் ஓய்வு வயது 50-ல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும்.

மாதாந்திர ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஓய்வூதியப் பங்களிப்புக்கான குறைந்தபட்ச ஆண்டு 15-ல் இருந்து 20 ஆக உயர்த்தப்படும். இந்த நடைமுறை 2030 முதல் தொடங்கும். ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் வீதம், 10 ஆண்டுகளில் இந்த நடைமுறை முடிவுக்குக் கொண்டுவரப்படும். ஓய்வூதிய பங்களிப்புகளின் குறைந்தபட்ச ஆண்டை அடைந்த பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில், முந்தைய சட்டப்பூர்வ ஓய்வு வயதை விட முன்னதாக ஓய்வு பெற அனுமதி இல்லை. சீன மக்களின் சராசரி ஆயுட்காலம், சுகாதார நிலைமைகள், மக்கள்தொகை அமைப்பு, கல்வி நிலை ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் ஏற்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து