முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் : காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      இந்தியா
Jairam-Ramesh 2023 07-16

Source: provided

டெல்லி : மற்ற பகுதிகளுக்கு எல்லாம் செல்ல திட்டமிடும் பிரதமர் வேண்டுமென்றே மணிப்பூரை தவிர்க்கிறார் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை உருவாவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி 3 பேர் கொண்ட கமிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (தகவல் தொடர்பு பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "3 பேர் கொண்ட கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கமிஷனுக்கு நவம்பர் 24-ந்தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் மக்களின் வேதனை தொடர்கிறது.

இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்ற நிலையில், மிகவும் இன்னல்களை சந்தித்து வரும் மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து