முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க சதி: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் நடந்த 3 என்கவுன்டரில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து சதி செயலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று (செப்.,14) பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  கதுவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  கீட்ஷ்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தோடா, கதுவா மற்றும் கீட்ஷ்வார் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து சதி செயல் செய்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. தோடா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில், நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய நிலையில் இந்த என்கவுன்டர் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து