முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: 32 பேர் கொண்ட தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கண்டர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டி

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2024      அரசியல்
Umar-Abdullah 2024-08-27

 ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியில் போட்டியிடுகிறார்.  

ஜம்மு காஷ்மீரில் 90 இடங்களுக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த  நிலையில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

இதில் தேசிய மாநாடு கட்சி 51 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி  32 இடங்களில் போட்டியிடுகிறது. 5 இடங்களில் தனித்தனியாக களமிறங்குகின்றன.  

இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில், தேசிய மாநாடு கட்சி சார்பில் 32 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. இதில் உமர் அப்துல்லா கண்டர்பால் தொகுதியிலும், தன்வீர் சாதிக் ஜடிபால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து