முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ், தெலுங்கு திரை உலகிலும் பாலியல் தொல்லை இருக்கிறது: நடிகை ஷகிலா பேட்டியால் பரபரப்பு

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2024      சினிமா
Shakeela-2024-08-29

சென்னை, தமிழ், தெலுங்கு திரை உலகிலும் பாலியல் தொல்லை உள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்தநிலையில், மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் திரை உலகமே நிலை குலைந்து போய் உள்ளது. 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நடிகை ஷகிலா தெரிவிக்கையில்., மலையாள திரை உலகில் இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த பிரச்சினை உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சினை இருக்காது. ஆனால் அங்கு நெபோடிசம் பிரச்சினை உள்ளது.

அதாவது புதிய நடிகர்கள் யாரையும் வளரவிடாமல் தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக்க முயற்சிப்பது போன்ற பிரச்சினை உள்ளது. தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகள் உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் தனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்துதான் அந்த நடிகை படத்தில் நடிப்பார்.

முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சினைகள் வருகிறது. குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து