முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பாக்.குடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2024      இந்தியா
Jaishankar 2023 04 09

Source: provided

புதுடில்லி : எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

புதுடில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காலம் முடிந்து விட்டது. இனிமேல் அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடக்காது என்பதில் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவு நீக்கப்பட்டு விட்டது. எனவே பாகிஸ்தானுடன் எந்த மாதிரியான உறவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதே பிரச்னை.

இந்தியா செயலற்ற நாடு கிடையாது. எந்த ஒரு நிகழ்வு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும், அதற்கு நாம் எதிர்வினை ஆற்றுவோம்.  பாகிஸ்தானில், பயங்கரவாதம் என்பது தொழில்முறையாக மாறிவிட்டது. இத்தகைய அச்சுறுத்தலை நாம் எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது செயல்திட்டமாக வைத்து உள்ளது. ஆனால், இந்த நிபந்தனையை ஏற்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்து பாகிஸ்தானின் கொள்கையை செயலற்றதாக்கி விட்டோம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து